Diravida Nadu ..hashtak treend in Twitter
மாட்டிறைச்சிக்கு நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக ட்விட்டரில் 'திராவிட நாடு' ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுள்ளது.

விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்கவோ, வாங்கபோ முடியும் என சட்டத்தில் புதிய விதிமுறைகளைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தற்போது, மாடுகளை விவசாயத்துக்கு பயன்படுத்துவது குறைந்து வருகிறது. பெரும்பாலும் விவசாயிகள் டிராக்ட்டர்களையே பயன்படுத்தி வருவதால் விவசாயத்துக்காக மாடுகளின் தேவை அவசியமில்லாம்ல் போய்விட்டது.
இந்நிலையில் மாடுகளை என்னதான் செய்வது என விவசாயிகள் மண்டையை பிய்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மத்திய அரசின் இந்தத் தடை அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறைச்சி வியாபாரிகள் , தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் தெரிவித்து வருகின்றனர். இந்தத் தடை அறிவிப்புக்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட இந்த தடையால் இந்தியா வடக்கு, தெற்கு என பிளவு ஏற்பட்டுள்ளதாக பொது மக்களிடையே கருத்து நிலவுகிறது.
இதன் ஒரு பகுதியாக தற்போது ட்விட்டரில் 'திராவிட நாடு' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
முதன் முறையாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த டுவிட்டர் பதிவைத் தொடங்கி வைத்துள்ளனர். கேரளா மாநிலத்தவர்களின் திராவிட நாடு ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
தமிழர்கள்,மலையாளிகள், கன்னடர்கள் என எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் திராவிட நாடு என்ற இந்த டேக்கில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து அகில இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.
ஏற்கனவே மைல் கற்களில் இந்தி திணிக்கப்பட்ட போதும் தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பை ட்விட்டரில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
