கடந்த 2013ம் ஆண்டு ஜீலை 4ம் தேதி தருமபுரி நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் மர்மமான முறையில் இரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார் . இதனை தொடர்ந்து இளவரசனின் உடல் மூன்று முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில் மூன்று அறிக்கையிலும் வெவ்வேறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இவரசன் காதல் திருமணம் செய்து கொண்டதாலே கொலை செய்யப்பட்டுள்ளார் மேலும் அவர் மரணம் தொடர்பாக பல்லேறு சந்தேகம் உள்ளது. 

குறிப்பாக AIIMS மருத்துவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் கனமான பொருளால் தாக்கட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதல் பிரேத பரிசோதனை அவசர கதியில் நடந்ததாகவும், போலீசார் இந்த வழக்கை தற்கொலை என்று கூறி முடிக்கும் நோக்கில் செயல்பட்டதாகவும் கூறியிருந்தார். 

மேலும் தற்போது வழக்கை விசாரிக்கும் அரூர் டி.எஸ்.பி இந்த வழக்கை முறையாக கையாளாமல் இழுத்தடித்து வருவதாகவும், வழக்பை தற்கொலை என முடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் மனுவில் கூறியுள்ளார். எனவே தன் மகன் இளவரசன் மரணம் குறித்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என கோரினார்.

 இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இளவரசன் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையில் மருத்துவர்கள் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாலும், மேலும் ஏய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையில் இளவரசன் உடலில் காயங்கள் இருப்பதால் கொலைக்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கூறியுள்ளதாலும், இந்த வழக்கை cbcid போலீசார் முறையாக விசாரித்து இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.