dhanabal discharging from hospital

தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்புகிறார் என தகவல்கள் வந்துள்ளன. நாளை சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வாரா என எதிர் பார்க்கப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக சட்டமன்ற சபாநாயகர், தனபால் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, செரிமன கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் பூரண குணமாகிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளது. இதையொட்டி இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால், சபாநாயகர் தனபால் அதில் கலந்து கொள்ளவில்லை. இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் அவர், நாளை சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வாரா என எதிர் பார்க்கப்படுகிறது.