தமிழக முதலமைச்சரை சந்தித்து டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் முக்கிய ஆலோசனையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகிய இருவரும்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது நீட் தேர்வை எதிர்த்து போராடி வந்த மானவு அனிதா தற்கொலை செய்துக்கொன்றா.அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனிதாவின் இறப்பிற்கு நீதி கேட்டும், நீட்  தேர்வை எதிர்த்தும் போராட்டங்கள்  நடைபெற்று வந்தது. இன்றும் பல  இடங்களில் போராட்டங்கள்  நடைபெற்று வருகின்றன.

பள்ளி  மாணவிகளின் திடீர்  போராட்டம்

நேற்று  முன்தினம் நுங்கம்பாக்கம்  பகுதியில் அரசு பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியல்  போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்றும் சில  மாணவர்கள் மெரீனா பீச், கல்லூரி வாசல் என தமிழகம் முழுவதும் உள்ள பல இடங்களில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை எவ்வாறு எதிர்கொள்வது? போராட்டத்தை எப்படி தடுப்பது என்பது குறித்த அடுத்த கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான ஆலோசனை தான் தற்போது முதல்வர் வீட்டில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாய் உள்ளது.