Asianet News TamilAsianet News Tamil

நேரடியாக ஏடிஜிபியை அணுகலாம் - டிஜிபி டி.கே ரஜேந்திரன் உறுதி...!

DGP DK Rajendran said that journalists can directly access their demands in the future.
DGP DK Rajendran said that journalists can directly access their demands in the future.
Author
First Published Sep 29, 2017, 5:23 PM IST


இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக ஏடிஜிபியை அனுகலாம் என டிஜிபி டிகே ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி அருகே இஸ்ரோவின் துணை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.அங்கு சில தினங்களுக்கு முன்பு குண்டு வெடித்ததாக தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டன.

இதற்காக தொலைக்காட்சி செய்தியாளர்கள் , ஒளிப்பதிவாளர்கள், நாளிதழ்களின் நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் மீது காவல் துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது.

DGP DK Rajendran said that journalists can directly access their demands in the future.

காவல்துறையின் இத்தகைய செயலை கண்டித்து திருநெல்வேலியில்  தொலைக்காட்சி செய்தியாளர்கள் , ஒளிப்பதிவாளர்கள், நாளிதழ்களின் நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்திட ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். இதில் பல பத்திரிகையாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.அவர்களது உடைகளும் கிழிந்துள்ளது.தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்களை போலீஸார் கைதும் செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை பத்திரிக்கையாளர்கள் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பத்திரிக்கையாளர்கள், இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக ஏடிஜிபியை அனுகலாம் என டிஜிபி டிகே ராஜேந்திரன் உறுதியளித்ததாக தெரிவித்தனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios