dengue fever children killed

தமிழகத்தில் சென்னை தொடங்கி, திருவள்ளூர், தேனி, சேலம், தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் பிற்பகல் வரை மதுரை, திருச்சி,கரூர் உட்பட பல இடங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மிகச் சிலரே இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, டெங்குவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், டெங்கு காய்ச்சலின் தீவிரம் இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுவதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. 



கடுமையான மர்மக் காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோமவாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் மற்றும் சலவநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த சென்னியப்பன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 



இதனிடையே கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் மணவாசி கிராமத்தைச் சேர்ந்த பூஜா என்ற் சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு , திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஏற்கனவே அந்த சிறுமிக்கு கரூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்காமல் திருச்சி அனுப்பப்ட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூஜா இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து டெங்குவால் உயிரிழந்த சிறுமியின் உடலை கிடத்தி கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வைத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.