டெங்குகாய்ச்சல் தற்போது தமிழ் நாட்டையே உலுக்கி வருகிறது. வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த எட்டு நாட்களில் மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் 6௦௦ பேரை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சை பெற்று வரும் பலரும் காப்பாற்றப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழக்கின்றனர்.

வருமுன் காப்பது சிறந்தது என்பதற்கேற்ப, டெங்குவை வராமல் தடுப்பதற்காக முதலில்  இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது  நல்லது.

கிராம்பு மற்றும் ஏலக்காய்

கிராம்பு மற்றும் ஏலக்காய் இவை இரண்டையும் நன்கு பொடி செய்துக்கொண்டு, அதனை  நாம் பயன்படுதும் கைக்குட்டையில் வைத்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை நுகர்ந்தாலே போதும், காய்ச்சல்  வர காரணமான வைரசை அது அழித்து விடுகிறது.

மேலும், தூய்மையான தேங்காய் எண்ணெயை முழங்காலுக்கு கீழ் தடவி வந்தால், கொசு கடிப்பதை  தவிர்க்க முடியும். அதாவது அந்த கொசுவினால் அதிக உயரத்திற்கு பறக்க முடியாத காரணத்தினால், முழங்கால் கீழ் கொசு கடிப்பதை தடுத்து நிறுத்த முடியும் .

மேலும், நம் குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை நில வேம்பு கசாயம் வைத்து கொடுத்தால்,  காய்ச்சலுக்கான  வைரசை அழிக்க முடியும்