Demonstration to provide law with equal pay for equal work ...
நாமக்கல்
நாமக்கல்லில் சமவேலைக்கு சம ஊதியம் கிடைத்திட உரிய சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புச் சாரா மற்றும் கட்டுமான தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,
வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும்.
தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்த கூடாது.
அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதி ஆணையம் அமைத்திட வேண்டும்” உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஹச்.எம்.எஸ். அமைப்புச் சாரா மற்றும் கட்டுமானத் தொழிற்சங்க பேரவை மற்றும் நாமக்கல் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தினர் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஹச்.எம்.எஸ். சங்கத் தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தர். விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில துணை தலைவர் செல்வராஜ், கூட்டமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன், கலைவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “சமவேலைக்கு சம ஊதியம் கிடைத்திட உரிய சட்டம் இயற்ற வேண்டும்,
அமைப்புசாரா தொழிலாளர் நலன் காக்க மாதம் ரூ.3000 குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுக்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
