தேனி

தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வலியுறுத்தி தேனியில் ஐக்கிய திருச்சபை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று பெரியகுளத்தில் நேற்று தேனி மாவட்ட ஐக்கிய திருச்சபை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபை தேனி மறை வட்ட அதிபர் ஜான்மார்ட்டின், ரோமா எழுப்புதல் திருச்சபை பிஷப் ஞானப்பிரகாசம், திருமண்டல திருமக்கள் செயலர் பெர்னாண்டஸ் ரத்தின ராஜா ஆகியோர் தலைமைத் தாங்கினர்.

தேனி மறைவட்ட ஆர்.சி. திருச்சபை பங்குத்தந்தையர்கள் முன்னிலை வகித்தனர். சமூக செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதிச் செயலர் இரா.தமிழ்வாணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிபிஐ மாநில துணைச் செயலர் மு.வீரபாண்டியன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியகுளம் ஆர்.சி.திருச்சபை பங்குத் தந்தை யோ.ஜெயசீலன் மற்றும் ஐக்கிய திருச்சபை போராட்டக் குழுவினர் செய்திருந்தனர்