Demonstrate on behalf of all parties in Erode to get back the ban on beef sales
ஈரோடு
மாட்டிறைச்சி விற்பனையை தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு, சென்னிமலையில் அனைத்துக் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சியினர் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டத்தில் நடைப்பெற்றது.
ஏராளமானோர் கலந்து கொண்ட இதில், “இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக் கூடாது என தடை விதித்த மத்திய அரசைக் கண்டிப்பது,
மாட்டிறைச்சித் தடையை நீக்கக் கோருவது” என்று வலியுறுத்தப்பட்டது.
திமுக சார்பில் நகரச் செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் ரவி, முன்னாள் தலைவர் ராஜேந்திரன், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, சென்னிமலை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் எஸ்.பொன்னுசாமி தலைமை தாங்கினார்.
சென்னிமலை வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.சிவகுமார், திமுக நிர்வாகிகள் சா.மெய்யப்பன், டி.என்.சின்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சென்னிமலை ஒன்றிய திமுக செயலாளர் பி.செங்கோட்டையன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் அமைப்பாளர் கி.வே.பொன்னையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியப் பொறுப்பாளர் கே.ரவி, காங்கிரஸ் நிர்வாகி என்.கோவிந்தராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒன்றியத் தலைவர் எம்.நூரே ஆலம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதிச் செயலாளர் சி.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
