புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து பொதுமக்கள் தங்கள் கைகளில் இருப்பு வைத்துள்ள பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் வந்துள்ள நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் இன்று முதல் வட மாநிலங்களில் புழக்கத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் விமானம் மூலம் சென்னை வந்தது. இதையடுத்து, 30 பெட்டிகளில் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கியை வந்தடைந்தது. எனவே, நாளை அல்லது நாளை மறுநாள் முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்று எதிபார்க்கப்படுகிறது.