தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் வித்யசகர்ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தீப ஒளி அறியாமை என்னும் இருளை போக்கி வெற்றி, ஒற்றுமை, நல்ல உடல் நலம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தீபாவளி திருநாள் நேர்மறை சிந்தனையுடன் பணியாற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரட்டும் என்று ஆண்டவனை பிராத்திப்பதாகவும், தீபாவளி கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தனது நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
