உடல்நலக்குறைவால் காலமான சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் அவரது பெசண்ட் நகர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிபட்டு வந்த சசிகலா கணவர் நடராஜனுக்கு கடந்த அக்டோபர் மாதம் உறுப்பு கிடைத்தது. பின்னர், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். 

பின்னர் வீட்டில் இருந்தே செக் அப் செய்து வந்தார். இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.35 மணிக்கு நடராஜன் உயிரிழந்தார். அவரின் உடல் பெசண்ட் நகர் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரின் அண்ணன் மகளான தீபா சசிகலா குடும்பத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தார். ஆனால் ஜெ.அண்ணன் மகனான தீபக் சசிகலாவிடம் நெருக்கமாகவே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.