எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் களத்தில் இறங்குகிறார் தீபா..புதிய கட்சி தொடங்குவாரா?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் பிறகு அதிமுக வை அவரது தோழி சசிகலா, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் உதவியுடன் கைப்பற்றியுள்ளார். கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, பின்னர் தலைமைக் கழகத்தில நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனால் அதிமுக வின் அரமட்டத் தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபாவை கட்சிக்கு தலைமை ஏற்கும்படி வலியுறுத்தி வருகின்றனா.

இதனையடுத்து அ.தி.மு.க.வில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களும், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளும் தயாகராய நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு நாள்தோறும் கூடி வருகின்றனர். அவர் விரையில் நல்ல முடிவெடுத்து அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக தொண்டர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள தீபா, தனது வீட்டு முன்பு நோட்டு புத்தகம் ஒன்றை வைத்துள்ளார்..அதில் அவரது ஆதரவாளர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தீபாவின் கணவர் மாதவன் சந்தித்து வருகிறார்.மாலையில் தொண்டர்களை சந்திக்கும் தீபா, அவர்கள் முன்பு சிறிது நேரம் பேசிவருகிறார்.

இதனிடையே தீபாவுக்கு, அதிமுக தொண்டர்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் தீபா பேரவை தொடங்கப்பட்டு, உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. மேலும், தீபாவை முன்னிறுத்தி கட்சியை தொடங்கவும், தொண்டர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தீபா தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அதன்படி எம்.ஜி.ஆர். பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி முதல் எனது அரசியல் பயணம் தொடங்கும் என்று தீபாஅறிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நுற்றாண்டு நாளான அன்று காலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சமாதியில்அஞ்சலி செலுத்தி விட்டு தனது அரசியல பயணத்தை தீபா தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாகவும் தீபா பேரவைக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் தனித்தனிய்க தொடங்கப்பட்டுள்ள தீபா பேரவைகளை ஒருங்கிணைத்து 17-ந்தேதி அன்று தீபா தனிக் கட்சியை தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.