தமிழகத்தில்  இன்று பிறை தெரியாததால், நாளை மறுநாள்  அதாவது சனிக்கிழமை  ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி சலாஹூதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். 

இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் நோன்பு இருப்பது. ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு. புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும்.

இதையடுத்து 30 வது நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.  ஷவ்வால் பிறை பிறை தெரிவதை தலைமை உலக முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் காஜி அறிவிப்பார்.இந்த வருடத்திற்கான பிறை தென்பட்டதை அவர் தற்போது அறிவித்துள்ளார். இந்நிலையில் சகோதரத்துவத்தை போற்றும் வகையில் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் தமிழகத்தில் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும் என தமிழக தலைமை ஹாஜி சலாஹூதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.