காதலுக்காக பெற்ற தாயை கொலை செய்த காதலிக்காக எத்தனை வருடமாக இருந்தாலும் நான் காத்திருப்பேன் என்று தேவிப்பிரியாவின் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதி ஆஞ்சநேயபுரம் 8-வது தெருவைச் சேர்ந்த திருமுருகநாதன்-பானுமதியின் இளையமகள் தேவிப்பிரியா. இவர் இந்துக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கையில் புத்தகம் இருக்கிறோதோ இல்லையோ ஆனால் தேவிப்பிரியா கையில் செல்போன் எப்போதும் இருக்கும். தினமும் முகநூலில் பலமணி நேரம் சாட்டிங்கில் மூழ்கி இருந்தார். தேவிப்பிரியா ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கல்லூரி விழாவில் அறிமுகமான சித்தூர் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இந்த பேஸ்புக் காதலுக்கு தாய் பானுமதி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த தேவிப்பிரியா தனது முகநூல் காதலன் விவேக்கை தொடர்புகொண்டு, தன்னை அழைத்துச் செல்லுமாறு செல்போனில் தொடர்பு கொண்டார். பின்னர் உனது அம்மாவை கொலை செய்துவிடு என்று சுரேஷ் ஐடியா கொடுத்துள்ளார். 

இதனையடுத்து விவேக், தனது நண்பர்களான விக்னேஷ், அஜித்குமார் ஆகியோருடன் சேர்ந்த தனது அம்மாவை கொலை செய்ய தேவிப்பிரியா திட்டம் தீட்டினார். அதன்படி பானுமதி வாயை பொத்திய கும்பல் அவரை சரமாரியாக குத்தியது. இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். உடனே அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அந்த கும்பலை பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

இதையடுத்து, தேவிப்பிரியாவின் காதலன் சுரேஷயை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், "எத்தனை வருடமாக இருந்தாலும் தேவிப்பிரியாவுக்காக காத்திருப்பேன் என்று கூறியுள்ளார். பானுமதி கொலை வழக்கில் சுரேஷ் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.