daily wager death in idly eat competition

இட்லி சாப்பிடும் போட்டியின்போது ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடுவதில் போட்டி போடும் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியின் மூலம் மிகப் பிரபலமானவர் காமெடி நடிகர் சூரி. படத்தில் வரும் அந்த காட்சி போன்ற உண்மையான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஆனால், படத்தில் வந்த அந்த காட்சியின் மூலம் சூரிக்கு வாழ்க்கை கிடைத்தது, ஆனால், நிஜத்தில் நடந்த நிகழ்வில் ஒருவரின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இட்லி சாப்பிடும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் கலந்துகொண்ட சின்னத்தம்பி என்ற கூலித்தொழிலாளிக்கு தொண்டையில் இட்லி சிக்கியதால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.