Dadasaheb Phalke Award for Actor and Director K.Vishwanam

2016-ம் ஆண்டின் 'தாதாசாகேப் பால்கே' விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய சினிமா துறையில் தனது பெரும்பாலான பங்களிப்பை அளித்து வரும் திரையுலகினருக்கு ஆண்டு தோறும் இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் மறைந்த இயக்குனர் தாதா சாகிப் பால்கே பெயரில் விருது வழங்கபடுவது வழக்கம்.

இந்நிலையில், 2016 ஆண்டுக்கான 'தாதாசாகேப் பால்கே' விருது நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை மே 3 ஆம் தேதி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்க உள்ளார். மேலும், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகிய படங்களை இயக்கியும், யாரடி நீ மோகினி, ராஜபாட்டை ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் கே.விஸ்வநாத் நடித்துள்ளார்.

இத்தகைய விருது வாங்கிய கே.விஸ்வநாத்திற்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.