Cylinder Price : பொது பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை இன்று மீண்டும் குறைந்தது..! எவ்வளவு தெரியுமா.?

பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலையானது 30ரூபாய் குறைந்துள்ளது. 1960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 1930 ரூபாயாக குறைந்துள்ளது.

Cylinder price for commercial use has been reduced today KAK

சமையல் எரிவாயு விலை குறைப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  அந்த வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் நாள் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பட்டுக்கான சிலிண்டரின் விலை  ரூ.12.50 அதிகரித்திருந்தது. இந்தநிலையில் இன்று ஏப்ரல் 1ஆம் தேதி பொதுப்பயன்பாட்டிற்கான விலையானது குறைந்துள்ளது. 

 வீட்டு சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

அதன் படி, 19 கிலோ எடை கொண்ட பொது பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.30.50 குறைந்துள்ளது 1960 ரூபாய்க்கு  விற்கப்பட்ட 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ. 1930 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மகளிர் தினத்தையொட்டி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை பிரதமர் மோடி 100 ரூபாய் குறைத்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் படி 918 ரூபாய் என்ற விலையில் இருந்து 818 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios