Customs officials seized 67 sovereign gold jewelery from a passenger from Bangkok at Trichy airport.

திருச்சி விமான நிலையத்தில் பாங்காங்கில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 67 சவரன் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல செய்தனர்.

பாங்காங்கில் இருந்து வரும் விமானத்தில் வரும் பயணிகள் மூலம் சென்னைக்கு தங்க நகைகள் கடத்தப்பட உள்ளதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதைகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பாங்காங்கில் இருந்து விமானம் மூலம் வந்த சென்னையை சேர்ந்த ரியாத் அகமது என்பவரிடம் சோதனை செய்தனர். அதில் 15. 40 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவரிடம் இருந்த 67 சவரன் நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.