தமிழகத்தில் 22 சுங்கசாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம்  உயர்த்தப்பட உள்ளது

சாலைகளின் தன்மைக்கு ஏற்றவாறு  7 முதல்  10 சதவீதம் வரை கட்டணம்  உயர்த்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் மொத்தம்  45  சுங்க  சாவடிகள்  உள்ளது...இதில் ஆண்டு தோறும் சுழற்சி அடிபடையில்,செப்டெம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில்  கட்டணத்தை உயர்த்தப்படுவது வழக்கம்

தனியார் கட்டுபாட்டில் உள்ள சுங்க சாவடிகள்

தனியார் கட்டுப்பாட்டில் உள்ள 15 சுங்கசாவடிகளும்,தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள 7 சுங்க சாவடிகளும் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

பரனூர்,வானகரம்,சூரப்பட்டு,கிரிஷ்ணகிரி,கப்பலூர்,நாங்குநேரி,எட்டூர் வட்டம்,பாலைபுத்தூர்,பூதக்குடி,சிட்டம்பட்டை,பள்ளிகொண்டா,வாணியம்பாடி,ஸ்ரீ பெரும்பத்தூர்,வாலாஜா,வாகைகுளம்,ஆத்தூர்,பட்டறை பெரும்புதூர், எஸ்வி புரம், லட்சுமண பட்டி,லெம்பலாக்குடி,தனியூர் உள்ளிட்ட சுங்க சாவடிகளில் வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அமல்ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரிப்பு.....

அதன்படி 52 கி.மீ நீளமுள்ள சாலைக்கு ஒரு தடவை செல்ல கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு ரூ.55லிருந்து ரூ.60 ஆகவும்,

 இலகு ரக வர்த்தக வாகனம், இலகுரக சரக்கு வாகனம், மினிபஸ் ரூ.90லிருந்து ரூ.95 ஆகவும்,

லாரி, ஆம்னி பஸ்களுக்கு ரூ.190லிருந்து ரூ.195 ஆகவும்,

 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்கள் ரூ.205லிருந்து ரூ.215 ஆகவும்,

கனரக வாகனங்களுக்கு ரூ.295லிருந்து ரூ.305 ஆகவும்,

பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் ரூ.360லிருந்து ரூ.375ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது  கூடுதல் தகவல்

இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் கருத்து தெரிவித்து உள்ளார்...

நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுவதற்காக ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது....ஆனால் எந்த வித பராமரிப்பும் செய்வதில்லை, சுங்கசாவடிகளில் ஆம்புலன்ஸ் கிடையாது, நல்ல பராமரிப்பு கிடையாது,  குடிநீர் கழிப்பறை,போதிய அளவு மின்விளக்குகள் இல்லாமல் இருக்கின்றன...என தெரிவித்தார்.

இது போன்ற எந்த வசதியும் செய்து தராமல்,கட்டணம் மட்டும் ஆண்டும் தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்