வர்தா புயலால் பாதிக்‍கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்‍கெடுவை வரும் 31-ம் தேதி ​வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அண்மையில் வீசிய வர்தா புயல் காரணமாக, மின் விநியோகம் பெரிதும் பாதிக்‍கப்பட்டது.

தற்போது, இம்மாவட்டங்களில் மின்விநியோகம் சீரடைந்திருக்‍கும் நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை கருத்தில் கொண்டு, மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்‍கெடு நீட்டிக்‍கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வரை பொதுமக்‍கள் மின்கட்டணம் செலுத்தலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.