Cultivation of culture ban dance music - District SP Action

திருவள்ளூர்

ஆடி மாதத்தில் கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்கல் கலாசாரத்தைச் சீரழிக்கும் குத்துப் பாடல்கள், ஆபாச நடனங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று என திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.

ஆடி மாதம் வர இருப்பதால் அந்த மாதத்தில் நடத்தப்படும் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

“திருவள்ளூர் மாவட்டத்தில், கோயில் திருவிழாக்களின் போது, கலாசாரத்தைச் சீரழிக்கும் விதத்தில் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் குத்துப்பாட்டுகள், ஆபாசமான நடனங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது.

மேலும், திருவிழாக்கள் நடத்த சம்பந்தப்பட்ட பகுதி டி.எஸ்.பி.யிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

திருவிழா தொடக்க நாள் முதல் இறுதிநாள் வரையிலான அனைத்து நிகழ்ச்சிகள் குறித்தும் அனுமதி கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிக ஒலியை எழுப்பும் இசைக் கருவிகள் மற்றும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.