school leave

தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் எங்கும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் நாகை மாவட்டங்களில் கனமழை பெது வருகிறது.

இந்த தொடர்மழையால் கடந்த வாரம் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் நாகை மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருவதாலும், தண்ணீர் தேங்கிக் கடந்த பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்தவும், மாணவர்களின் சுகாதார நிலை கருதியும் இன்று 5 மாவட்ட பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.