காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கடலூரில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் தொடர் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியுள்ளது. காவிரி பாசனத்தை நம்பியுள்ள தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகாலை முதலே விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே அய்யனாபுரத்தில் தண்டவாளத்தில் விவசாயிகள் அமர்ந்தனர். விவசாயிகளுடன் திமுகவினரும் தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கமிட்டனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் விவசாயில் ரயில் மறியலில் ஈடுப்பட்டனர். விவசாயிகளுடன் திமுக, காங்கிரஸ் கட்சியினரும் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.
போலீசாரின், தடையை மீறி மீறி காரைக்கால் - பெங்களூர் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல் - கடலூரில் 200 பேர் கைது
Latest Videos
