Court orders probe into Bhubaneswari

விபசார வழக்கில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகை புவனேஸ்வரி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் தேதி அன்று திருச்சியில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. காணாமல்போன தன்னுடைய மகளை, நடிகை புவனேஸ்வரி வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக இளம் பெண்ணின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.

திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண், பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் மிதுன் என்பவருடன் அந்த இளம் பெண் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, காணாமல் போன இலங்கை இளம் பெண்ணின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், காணாமல் போன மகளை, நடிகை புவனேஸ்வரி வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார் என்றும், மகளுக்கு போதை பழக்கத்தை ஏற்படுத்திவிட்டார் என்றும் அவரை மீட்டுத் தர வேண்டும் என அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நேரில் ஆஜராகாத நடிகை புவனேஸ்வரிக்கு கம் கண்டனம் தெரிவித்தது. மேலும், நடிகை புவனேஸ்வரி வரும் 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜாராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.