Asianet News TamilAsianet News Tamil

சிறைக்கு செல்கிறார் ஜவாஹிருல்லா - தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்!!

Court confirms the sentence of jawahirullah
Court confirms the sentence of jawahirullah
Author
First Published Jun 19, 2017, 2:50 PM IST


வெளிநாட்டில் இருந்து பணம் பெற்ற வழக்கில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

கடந்த 15.12.1997 முதல் 20.6.2000 வரை இவர்கள் செய்த குற்றம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 வசூலித்ததாகவும், இதற்கு முறையாக மத்திய அரசிடமோ, ரிசர்வ் வங்கியிடமோ அனுமதி பெறவில்லை என்றும் மேற்கண்ட 5 பேர் மீதும் வெளிநாட்டு பணம் முதலீட்டு ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் குற்றம்சா‌ற்‌றி வழக்கு போடப்பட்டது.

Court confirms the sentence of jawahirullah

இந்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்ற ‌நீ‌திப‌தி ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் தலா ஓரா‌ண்டு ‌சிறை‌த் தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் ‌சிறை‌த் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இவர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த சிறை தண்டனையை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதிகள், ஜவாஹிருல்லா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், எழும்பூர் நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறையை, சென்னை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios