correction in adar card

ஆதார் அடையாள அட்டையில் பெயர், முகவரி , செல்போன எண் உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்ய, சென்னையில் 10 தபால் நிலையங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல்(ஜூலை3) இந்த திருத்தங்களை குறிப்பிட்ட தபால் நிலையங்களில் மேற்கொள்ளலாம்.

ஆதார் எண் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பும், தபால் துறையும் இணைந்து, ஆதார் அடையாள அட்டையில் மக்கள் தங்கள் விவரங்களை திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதன்படி, சென்னையில் தலைமை தபால் நிலையம், அண்ணா சாலை, தியாகராயநகர் தலைமை தபால் நிலையம், மைலாப்பூர், பரங்கிமலை, தேனாம்பேட்டை, அண்ணா நகர், அசோக் நகர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் உள்ள தபால்நிலையங்களில் ஜூலை 3-ந்தேதி முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

இந்த வசதி படிப்படியாக மாநிலத்தில் உள்ள 2 ஆயிரத்து 515 தபால்நிலையங்களில் படிப்படியாக வரிவுபடுத்தப்படும் என தபால்நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.