அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தைல மரத்தோப்புக்குள் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தவரின் சடலத்தை காவலாளர்கள் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜெயங்கொண்டம் கேவிஎம் நகர் பின்புறம் உள்ள தைலமரத் தோப்பில் ஒரு மரத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதை அவ்வழியாகச் சென்றவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் கண்டனர்.
இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் இனிகோதியன் உள்ளிட்ட காவலாளர்கள் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என விசாரித்து வருகின்றனர்.
