Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. இனி தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் .. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி முதல் மீண்டும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

Corona Vaccine Camp in Tamil Nadu on the May 8th - Health Minister Ma.Subramanian Press Meet
Author
Tamil Nadu, First Published Apr 22, 2022, 12:17 PM IST

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி முதல் மீண்டும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாமில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்ரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரானா பரவல் இந்தியா முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.டெல்லி , உத்தரபிரதேசம், மகாரஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது என்று கூறினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. ஏனெனில் சென்னை ஐஐடியில் நேற்று 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று அமைச்சர் கூறினார். அதுமட்டுமல்லாமல் வட மாநிலங்களில் இருந்து சென்னை வந்த தொழிலாளர்களுக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது என்றார்.

வட மாநில தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட  நிறுவனங்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்களுக்கு இலவச ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மேலும் வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசி  தமிழக அரசு சார்பில் செலுத்தப்படும் என்றார்.

தமிழகத்தில் கொரானா பாதிப்பு 21 நபர்கள் வரை இறங்கி வந்தது ஆனால் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 92.42 விழுக்காட்டினர் முதல் தவணையும் , 77.69 விழுக்காட்டினர் இரண்டாம் தவணையும் செலுத்தியுள்ளனர்.  இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கருத்திகொண்டு, வரும் 8 ம் தேதி சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமை தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடத்த உள்ளதாக அமைச்சர் அறிவித்தார். 

முதல் தவணை செலுத்திக் கொள்ளாத 54 லட்சம் பேர் , இரண்டாம் தவணை செலுத்தாமல் உள்ள 1 கோடியே 46 லட்சம் பேர் என ஏறக்குறைய 2 கோடி பேரை மனதில் வைத்து இந்த தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை செலுத்தாமல் உள்ளோரை தனித்தனியே வீடு தேடி சென்று சந்தித்து 8 ம் தேதி தடுப்பூசி செலுத்த வேண்டுகோள் விடுக்கப்படும் என கூறினார். இதனிடையே தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் இன்னும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: உஷார் மக்களே.. ! சற்றுமுன் முக்கிய தகவல்.. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.. தமிழக அரசு அறிவிப்பு..

Follow Us:
Download App:
  • android
  • ios