Asianet News TamilAsianet News Tamil

Omicron : வேகமெடுக்கும் ஒமைக்ரான்… நாளை முதல் தமிழகம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!!

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவலால் வங்கதேசம், ஜிம்பாவே உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து தமிழகம் வருபவருக்கு பரிசோதனை கட்டாயம் எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Corona test is mandatory for those coming to Tamil Nadu from 12 countries
Author
Tamilnadu, First Published Nov 30, 2021, 5:22 PM IST

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவலால் வங்கதேசம், ஜிம்பாவே உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து தமிழகம் வருபவருக்கு பரிசோதனை கட்டாயம் எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது.  இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.

Corona test is mandatory for those coming to Tamil Nadu from 12 countries

மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்தியாவில் இதுவரை யாரும் ஒமைக்ராவால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், சீனா, பிரேசில், போத்ஸ்வானா, மொரீஷியஸ்,  இஸ்ரேல், ஹாங்காங், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளன. இதை அடுத்து இந்த நாடுகளிலிருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்றும் பரிசோதனை முடிவு வரும் வரை அவர் விமான நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் ஒமைக்ரான் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Corona test is mandatory for those coming to Tamil Nadu from 12 countries

அதன்படி ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவலால் 12 நாடுகளிலிருந்து தமிழகம் வருபவருக்கு பரிசோதனை கட்டாயம் எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெளிநாட்டு விமான பயணிகளை ஏழுநாள் தனிமைப்படுத்துதல் உட்பட 14 நாள் கண்காணிப்பில் வைத்திருக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதலில் தென் ஆப்பிரிக்கா, பிரேசில், சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, நியூசிலாந்து, ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு ஒமைக்ரான் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல், மொரிசியஸ், போட்ஸ்வானா, இங்கிலாந்து, வங்கதேசம், ஜிம்பாவே உள்பட 12 நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு ஆர்டி- பிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி புதிய கட்டுப்பாட்டு வழி காட்டு நெறிமுறைகள் நாளை முதல் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios