Asianet News TamilAsianet News Tamil

#Breaking: யாரையும் விட்டு வைக்காத கொரோனா..காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசருக்கு கொரோனா பாசிட்டிவ்..

திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Corona positive for Congress MP Thirunavukkarasar
Author
Tamil Nadu, First Published Jan 9, 2022, 9:57 PM IST

இந்தியாவிலும் தமிழகத்திலும் தொடர்ந்து கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு தலைவர்கள், திரைத்துறை சேர்ந்த பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களும் கொரோனா தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர்.அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் திருச்சி தொகுதி எம்.பியுமான திருநாவுக்கரசருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுக்குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் , லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனை படி  தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த 2 நாட்களாக என்னை நேரில் சந்தித்தவர்கள்,தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு 3,623-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 40,863 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 327 பேர் பலியாகியுள்ளனர்.இதனிடையே கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து பிரதமர் மோடி உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக விரைவில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் அலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. அதேபோன்று நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கொரோனா பாதிப்பு சூழல் தொடர்பாக காணொளி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இதுபோன்று தமிழகத்தில் கொரோனா தொற்று நாள்தோறும் இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு சார்பில் பல்வேறு கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை நடைமுறைபடுத்தியுள்ளனர். மேலும் கொரோனா ஊரடங்கு நீடிப்பது குறித்து நாளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. தற்போது உள்ள நடைமுறை தொடருமா அல்லது மேலும் கட்டுபாடுகள் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்படும்.

இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை வரும் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சத்தை தொடும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பரவல் உச்சத்திற்கு வரும் நாட்கள் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி விகிதம் பொருத்து மாறலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் இந்தாண்டு கொரோனா பரவல் மிகவும் குறைவான நாட்களில் உச்சத்தை தொட்டு பின்பு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டு பரவலை போல் இம்முறை கொரோனா பரவல் இந்தியாவில் சில மாதங்கள் நீடிக்காது என்று வல்லுநர்கள் அந்த ஆய்வில் கூறியிருந்தனர். இதேபோல் ஐஐடி-கான்பூர் நடத்திய ஆய்விலும் இந்தியாவில் கொரோனா பரவல் வரும் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி உச்சத்தை தொடும் எனக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios