தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

19.09.2022 மற்றும்‌ 20.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

21.09.2022 மற்றும்‌ 22.09.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

23.09.2022: வட தமிழக மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:ராமேஸ்வரத்தில் ஓபிஎஸ் குடும்பத்தினருடன் வழிபாடு.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

19.09.2022 முதல்‌ 21.09.2022 வரை மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

19.09.2022 மற்றும்‌ 20.09.2022: வடக்கு ஆந்திரகடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

21.09.2022: வடக்கு ஆந்திரகடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:செம்பரம்பக்கம் ஏரியில் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுத்த போது விபரீதம்.. நீரில் முழ்கி இருவர் பலி