சல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சார்பில் கடந்த 5 நாள்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.
இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், இளம்பெண்கள், மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வந்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல் காவலாளர்கள், இந்த போராட்டக்காரர்களுக்கு எதிராக களம் இறக்கிவிடப்பட்டு உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறவழியில் ஈடுபட்டிருந்த போதிலும், காவலாளர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது கலைந்து செல்லுமாறு காவலாளர்கள் கூற இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவர்கள், நிரந்த தீர்வு வேண்டும் என முழக்கமிட்டு, போராட்டத்தில் இருந்து கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இதனால், ஒலிபெருக்கி, நாற்காலிகளை பறிமுதல் செய்த காவலாளர்கள்
சல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதையடுத்து, பெரம்பலூர் ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்தி வருவோரை கலைந்து செல்லுமாறு அவர்கள் மீது வன்முறையை ஈடேற்றியது.
இதையடுத்து, போராட்டத்தல் ஈடுபட்டோர் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
