தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு நேற்று திரும்பியதால் கோயம்பேடு பேருந்து நிலையம், மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு நேற்று திரும்பியதால் கோயம்பேடு பேருந்து நிலையம், மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தமிழகம் முழுவதும் இன்று சரஸ்வதி பூஜை, நாளை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அதை தொடர்ந்து சனி, ஞாயிறு இன்று விடுமுறை. ஆகையால் நான்கு நாட்கள் பெரும்பாலான பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டனர். அதன்படி தங்களின் விருப்பத்திற்கேற்ப ரயில், பேருந்துகளில், அவர்கள் சென்றனர்.

இதனால் எழும்பூர், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்களில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு முடிந்து விட்டதால், பொது பெட்டிகளிலும், சிறப்பு ரயில்களிலும் பெரும்பாலானோர் நின்று கொண்டே சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூடுதல் பயணிகள் வருவார்கள் என்பதால், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி இயக்கப்படும், 2,275 பேருந்துகள் தவிர்த்து, கூடுதலாக 775 ஸ்பெஷல் பேருந்துகள் இயக்கப்பட்டன. 

இதேபோல், ஏராளமான 200-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டது. மேலும் சாதாரண ஆம்னி பேருந்துகளில் 50 சதவீதம் கூடுதல் கட்டணமும், குளிர்சாதன பேருந்துகளில் இருமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.