தூத்துக்குடி

தூத்துக்குடியில் பட்டப்பகலில் அடுத்தடுத்த வீடுகளில் கதவை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

நேற்று மாலை வீட்டுக்கு வந்த மணி கதவு, பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பணம் திருடு போனது குறித்து காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தார். 

தகவல் கேட்டு சம்பவ இடத்துக்கு வந்த திருச்செந்தூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் செல்வக்குமார் மற்றும் காவலாளர்கள் இதுகுறித்து விசாரித்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

பட்டப்பகலில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது என்ற தகவலை அறிந்த இந்தப் பகுதி மக்கள் பீதியடைந்தனர். கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என்று காவலாளர்களுக்கு  கோரிக்கையும் வைத்தனர்.