சென்னையில் பூட்டியிருந்த பல்வேறு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில மாதமாக தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

இதையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது.

இதைதொடர்ந்து இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக மணிகண்டன், வீரமணி என்ற இருவரை கடந்த வாரம்போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆனந்த், மந்தைவெளியை சேர்ந்த விஜி ஆகியோர் தொடர் கொள்ளைகளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அவர்களை தேடிவந்த போலீசார், இன்று கைது செய்தனர். மேலும் 30 சவரன் நகை, லேப்டாப் மற்றும் 2 கிலோ வெள்ளிப் பொருட்களும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.