காங்கிரஸ் – திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் தற்போது நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் உள்பட பலர் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட வந்த வேட்பாளர் நாராயணசாமி, “மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கின்றனர். காங்கிரஸ் – திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என செய்தியாளர்களிடம் கூறினார்.