அரியலூர்,
டெல்லியில் ராகுல்காந்தியை கைது செய்ததை கண்டித்து, அரியலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் இராணுவ வீரரின் உடலுக்கு காங்கிரசு கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தச் சென்ற போது காவலாளர்கள் அவரை கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட காங்கிரசு கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகர தலைவர் பழனிசாமி, மாவட்ட துணைத்தலைவர் கொளஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கையில் கொடியை பிடித்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் சந்திரசேகர், சீமான், மாவட்ட தொழிற்சங்கம் சிவக்குமார், பிச்சைப்பிள்ளை, இரவிசந்திரபோஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
