congress ex mp caught in cheque fraud

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இரா. அன்பரசு மீதான காசோலை வழக்கில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை அமர்வு நீதிமன்றம்.

சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா, கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இரா.அன்பரசு, அவரது மனைவி கமலா அன்பரசு மற்றும் உதயம் தியேட்டர் பங்குதாரர் மீது காசோலை மோசடி குறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுண் நீதிமன்றம், அன்பரசு உள்ளிட்டோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், வாங்கிய கடன் தொகை ரூ.35 லட்சத்துக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து இரா. அன்பரசு, மேல்முறையீடு செய்தார். அன்பரசனின் மேல்முறையீட்டை சென்னை அமர்வு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இரா. அன்பரசுவின் மனைவி இறந்துவிட்டதால் அவரது தண்டனை கைவிடப்பட்டது. மேலும், இரா. அன்பரசுக்கு அன்பரசு மனைவி இறந்து விட்டதால் அவரது தண்டனை கைவிடப்பட்டது. மேலும் இரா. அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.