ஈரோட்டில், நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், மக்கள் படும் அல்லல்களுக்காகவும், மோடி அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று மோடி அறிவித்ததில் இருந்து மக்கள் பல்வேறு பிரச்சனைகளையும், துயரங்களையும் சந்தித்து வருகின்றனர்.

50 நாள்கள் பொருத்துக் கொள்ளுங்கள் என்று மோடி கூறி 20 நாள்களே ஆன நிலையில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

80% இந்திய மக்கள் வங்கி, ஏ.டி.எம் என நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று, உடல் சோர்வையும் மன சோர்வையும் மோடியின் அறிவிப்பால் தினமும் அனுபவித்து வருகின்றனர்.

இதுபோன்று மக்கள் படும் துயரங்கள் ஏராளம்.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக வெளிவந்த மோடியின் இந்த அறிவிப்பைக் கண்டித்தும், மக்கள் படும் துயரங்களுக்கும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், நெட்டிசன்களும் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

அந்த வகையில், பொதுமக்களை அல்லல் படுத்தும் மோடி அரசை கண்டித்து ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திமுக மாவட்டச் செயலாளர் சு.முத்துச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.