Confrontation between prisoners in central prison

சென்னை, புழல் மத்திய சிறையில் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கும், துருக்கி நாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கும் இடையே மோதட்ல ஏற்பட்டது. 

புழல் சிறையில் துருக்கி நாட்டு கைதிகளும், போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இருநாட்டு கைதிகளிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, துருக்கி நாட்டைச் சேர்ந்த மகிர் என்ற கைதி தாக்கியதில் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த டொமிங்கோஸ், டயாஸ் ஆகியோர் காயம் அடைந்தனர்.

கைதிகள் மோதல் தொடர்ந்து சிறை அதிகாரிகள், காயமடைந்த கைதிகளை சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மோதலில் ஈடுபட்ட கைதிகளிடம்
இருந்த செல்போன்களையும் சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.