ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியை மீட்டு விரைவில் ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சி மலரும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

அதிமுக துணைப்பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறைக்கு சென்று ஜாமினில் திரும்பினார்.

இதனால் எடப்பாடி அமைச்சரவை தினகரனை ஒதுக்கிவிட்டு ஒபிஎஸ்க்கு அழைப்பு விடுத்தது.

ஆனால் ஒபிஎஸ் அணி கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இருந்தாலும், இதுவரை எடப்பாடி அரசு அசைந்து கொடுக்கவில்லை. 

இருந்தும் எடப்பாடி தரப்பு அமைச்சர்கள் இருதரப்பு இணையும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே ஒபிஎஸ் வரும் 10 ஆம் தேதி தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது எடப்பாடி தரப்பினரிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஒபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன், ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியை மீட்டு விரைவில் ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சி மலரும் என  தெரிவித்தார். 

மேலும் மக்களுக்காக வரும் 10ம் தேதி தொடங்கும் முதல் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறினார்.