Conch wages death or struggle at the beaten road

திருவள்ளூர்

ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சங்கு ஊதியும், சாவு மணி அடித்தும் சாலைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர், எண்ணைய் ஆலை பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் போராட்டம் நடத்தினர்.

ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் சங்கு ஊதியும், சாவு மணி அடித்தும் போராட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜீவானந்தன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட துணை செயலாளர் ஜெஸ்டின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோதண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் அருள்டேனியல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

இந்த போராட்டத்தில் “சாலை பராமரிப்பு பணிகளை தனியார் வசம் வழங்கும் தமிழக அரசின் கொள்கை முடிவை கைவிட்டு விட்டு பராமரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்,

தற்காலிக ஊதிய முறையில் வழங்கப்படுவதை மாற்றி நிரந்தர ஊதிய முறையை பின்பற்றி ஊதியம் வழங்க வேண்டும்,

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

மேலும், இந்த போராட்டத்தில் ஏராளமான நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் பங்கேற்ரு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.