Compulsory Intercourse - Old man to die - 3 persons arrest

மழைநில் நனைந்து வந்த முதிவருடன் கட்டாயப்படுத்தி உறவு கொண்டதால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சின்னமடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவருக்கு வயது 70. மிளகாய் வியபாரியான இவருக்கு, மகள், மருமகனுடன் சின்னமடத்துப்பாளையத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு திருமணத்துக்காக மகளும், மருமகளும், பவானிக்கு சென்றனர். திருமணத்துக்கு சென்று திரும்பிய மகள் மற்றும் மருமகன், சாமிநாதன் வீட்டில் இல்லாததைக் கண்டனர். பெருந்துரை புது பேருந்து நிலையம் அருகே சாமிநாதனின் இரு சக்கர வாகனம் இருந்ததை அவர்கள் கண்டு பிடித்தனர். இது குறித்து, அவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிப்காட் அருகே மலையாண்டி காட்டுப்பகுதியில் சாமிநாதன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சாமிநாதன் அணிந்திருந்த நகைகள், பணம் ஆகியவை அப்படியே இருந்துள்ளது. இந்த நிலையில், சென்னிமலை ஒன்றியம் வரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழியிடம், இரண்டு பெண்கள் உட்பட 3 பேர், குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர். பின்னர் அவர்கள், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

விஜயமங்கலம், விண்டெக்ஸ் நகரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (57). கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். சாமிநாதனும், பாப்பாத்தியும் பல வருடங்களாக தொடர்பில் இருந்துள்ளனர். நவம்பர் 30 ஆம் தேதி மதியம், பாப்பாத்தி வீட்டுக்கு வந்துள்ளார் சாமிநாதன். மழையில் நனைந்து வந்த சாமிநாதன் மிகுந்த நடுக்கத்துடன் இருந்திருக்கிறார். அந்த நிலையிலும், சாமிநாதனை உறவுக்கு அழைத்தாராம் பாப்பாத்தி. அதற்கு சாமிநாதன் மறுத்தும், வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட்டாராம் பாப்பாத்தி. 

அப்போது சாமிநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. இதில் பயந்துபோன பாப்பாத்தி சென்னிமலை அருகே வாய்பாடியில் வசிக்கும் தன் மகன் கிருஷ்ணனுக்கும், சென்னிமலை ஓட்டப்பாறை பகுதியில் வசிக்கு சம்பந்தி ஈஸ்வரியிடமும் கூறி வரவழைத்துள்ளார். இவர்களுடன் சேர்ந்த சாமிநாதன் உடலை, சமையல் அறையில் மறைத்து வைத்துள்ளனர். இரவு நேரத்தில், சாமிநாதனை உடலை காரில் கொண்டு சென்று சிப்காட் பகுதியில் மலையாண்டி காட்டுப்பகுதியில் போட்டுள்ளனர். பாப்பாத்தியின் வீட்டில் நின்றிருந்த சாமிநாதனின் இருசக்கர வாகனத்தை பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வந்து விட்டதாக போலீசாரிடம் அவர்கள் கூறினர்.

இதனை அடுத்து, பாப்பாத்தி, அவரது மகன் கிருஷ்ணன், சம்பந்தி ஈஸ்வரி ஆகிய மூன்று வேரையும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மழையில் நனைந்து நடுக்கத்துடன் வந்த சாமிநாதனை, வயதானவர் என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட்ட பாப்பாத்தியினால் சாமிநாதன் உயிரை விட்டுள்ளார்.