கடலோர மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் பெய்ய வேண்டும். ஆனால் நாடா புயல் ஏற்பட்டு, மழை பொய்து போனது. பின்னர், கடந்த டிசம்பர் 12ம் தேதி வர்தா புயல் ஏற்பட்டு, மழை அறவே இல்லாமல் போய்விட்டது. வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டதால், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தட்ப வெப்பநிலை மாற்றத்தால், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, சில இடங்களில் அடிக்கடிமழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக வட மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில், பரவலாக மழை பெய்துள்ளது. பாபநாசத்தில், அதிகபட்சமாக, 11 செ.மீ., மழை பதிவானது.

இந்நிலையில், அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் மட்டும், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.