அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் 14 ஆம் தேதி முதல் தமிழ்கத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.

சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுபேற்றார். ஆனால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடிக்கும், டிடிவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக தெரிகிறது.

இதையடுத்து இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சிறைக்கு சென்ற தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்குவதாக எடப்பாடி தரப்பு தெரிவித்தது.

அதற்கு டிடிவி 60 நாட்கள் பொறுப்பேன் இரு அணிகளும் இணைய வேண்டும் இல்லையேல் மீண்டும் கட்சி பணிகளை ஆற்ற தலைமை கழகம் வருவேன் என அறிவித்திருந்தார்.

ஆனால் அணிகள் இணையாததால் விரைவில் தலைமை கழகம் வருவேன் எனவும் அதற்கு முன்பு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் எனவும் டிடிவி தெரிவித்திருந்தார்.

அதன்படி சுற்றுப்பயண தேதியை குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டிடிவி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட வாரியாக பொதுகூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி மதுரை மேலூரில் தனது முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் டிடிவி.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி வட சென்னையிலும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேனியிலும், செப். 5 ஆம் தேதி கருரிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

செப். 12 ஆம் தேதி தஞ்சையிலும் செப். 23 ஆம் தேதி நெல்லையிலும், செப்.26 ஆம் தேதி தருமபுரியிலும், செப். 30 ஆம் தேதி திருச்சியிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

மேலும், அக். 5 ஆம் தேதி சிவகங்கையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.