திண்டுக்கல் அருகே புனுகுப்பூனை மற்றும் முயலை வேட்டையாடிய கல்லூரி மாணவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள தனியார் வங்கி காவலாளி ஒருவரின் துப்பாக்கியை எடுத்து சென்று புனுகுப்பூனை மற்றும் முயலை கல்லூரி மாணவர்கள் வேட்டையாடியுள்ளனர்.
இதனை அறிந்த வனத்துறையினர் இந்த வேட்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.
மேலும், இவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, கட்டுத் தோட்டாக்கள், ஆட்டோ மற்றும் வேட்டையாடிய புனுகுப்பூனை, முயல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
