Asianet News TamilAsianet News Tamil

பெரிய இழப்பிற்கு பிறகும் ரயிலில் தொங்கி செல்லும் தறுதலைகள்...! பாவப்பட்ட பெற்றோர்கள்!

சென்னையில் அடிக்கடி ரயில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. ரயில்வே துறை தரப்பில் பல்வேறு அறிவுரை வழங்கினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் கல்லூரி மாணவர்கள் இல்லை என்று தெரிகிறது.

College Student Train traval danger
Author
Chennai, First Published Sep 4, 2018, 5:13 PM IST

சென்னையில் அடிக்கடி ரயில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. ரயில்வே துறை தரப்பில் பல்வேறு அறிவுரை வழங்கினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் கல்லூரி மாணவர்கள் இல்லை என்று தெரிகிறது. இன்று வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பறக்கும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் அரஜாகத்தில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைக்கு செல்லும் ரயிலில் மாணவர்கள் ஆபத்தான வகையில் ஜன்னலில் நின்றப்படி பயணம் செய்துள்ளனர்.

  College Student Train traval danger

கடந்த சில மாதங்களாகவே சென்னையில் மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனிடையே கல்லூரி மாணவர்கள் சிலர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தி, கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் பயணம் செய்யும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சுறுத்தலில் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த மாதங்களுக்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் செல்லும் வயர் அறுந்து விழுந்ததால் அவ்வழியாக செல்லும் மின்சார ரயில்கள் விரைவு ரயில் செல்லும் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால் ரயிலில் கூட்டம் அலைமோதிய நிலையில் சென்னை பழவந்தாங்கலில் மின்சார ரயிலில் தொங்கி கொண்டு வந்தவர்கள் தடுப்புச் சுவரில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். College Student Train traval danger

அதேபோல கடந்த வாரம் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் தரப்பில் பல்வேறு அறிவுரை வழங்கினாலும், கல்லூரி மாணவர்கள் ரயில் ஜன்னலில் நின்றப்படி ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios