collectors ajar in chennai high court
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில், இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத 13 மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.
ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.
ஆனால், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை எனக்கூறி இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்புச் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாத 13 மாவட்ட ஆட்சியர்களும் நேரில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, நாகை, தஞ்சை, தருமபுரி, நீலகிரி, கரூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 13 மாவட்ட ஆட்சியர்களும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
